LPL போட்டி தொடரில் 150 பிரபல வீரர்கள்

LPL போட்டி தொடரில் 150  பிரபல வீரர்கள்

இந்த வருட இறுதியில் இலங்கையில் நடைப்பெற இருக்கும் LPL  கிரிக்கட் தொடரில் 150 ற்கும் மேற்பட்ட முன்னனி வீரர்கள் விளையாட இருக்கின்றனர்

குறிப்பாக T20  போட்டிகளில்  சூப்பர் ஸ்டார்களாக கருதப்படும் கிறீஸ் கெய்ல், டெரன் சாமி, டெரன் பிரவோ, ரவி போப்ரா, முனாப் பட்டேல், சயிட் ஆப்ரிடி, ஷகிப் ஹல் ஹசன், கொலின் முனாரோ உட்பட  30 சர்வதேச வீரர்கள் பங்குபெறுவது முக்கிய அம்சமாகும்.

ஐந்து அணிகள் பங்கு பெறும்  இந்த போட்டி தொடரில் ஒரு அணிக்கு 6 சர்வதேச வீரர்களை ஒரு அணி உள்வாங்க  முடியும். அதற்கு மேலதிகமான அனைத்து வீர்கள் இலங்கையர்களாக இருக்க வேண்டும்.

இதற்காக முதற்தர போட்டிகளில் விளையாடிய 60 வீரர்கள் முதற்சுற்று ஏலத்தில்  விலைப்போக இருக்கிறார்கள்.

இந்த ஏலம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் திகதி கொழும்பில் நடைப்பெறும்.

அத்தோடு போட்டித்தொடர் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 6 ஆம் திகதி வரைதம்புள்ளை, ஹம்பாந்தோட்டை மற்றும் பள்ளேகல ஆகிய பிரதேசங்களில் இடம்பெறும்.

முதல் போட்டி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகும்.உண்மையில் இந்த தொடர் ஆகஸ்ட் மாதம் நடைப்பெற இருந்தது ஆனால் கொவிட் 19 காரணமாக தள்ளிப்போனது

administrator

Related Articles