LPL போட்டி தொடர் ஏலம் முடிந்தது, யாழ் டஸ்கர்ஸ் அணியில் மூன்று தமிழ் வீரர்கள் இணைவு!

LPL  போட்டி தொடர் ஏலம் முடிந்தது, யாழ் டஸ்கர்ஸ் அணியில் மூன்று தமிழ் வீரர்கள் இணைவு!

LPL  போட்டித்தொடரில் பங்கு பெறும் வீரர்களில்  கிறீஸ் கெய்ல்ய்ஸ் கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்காக வீரர்களின் ஏல விற்பனை ஆன்லைன் ஊடாக இடம்பெற்றது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை இந்த போட்டித்தொடர் கண்டி பல்லேகல மற்றும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும்.

LPL எனப்படும் லங்கா பிரிமியர் லீக்கில் இம்முறை ஐந்து அணிகள் மோதுகின்றன.

கொழும்பு கிங்ஸ், தம்புள்ள ஹவாக்ஸ், காலி கிலாடியேட்யர்ஸ், யாழ் ஸ்டாலின்ஸ், கண்டி டஸ்கர்ஸ் அணிகள் மோதுகின்றன.

கொழும்பு கிங்ஸ்

கொழும்பு கிங்ஸ் அணிக்கு அஞ்சலோ மெத்தியூஸ் தலைமை தாங்குகிறார்.அவருடன் தென் ஆபிரிக்க கிரிக்கெட் வீரரான பப் டூ பிளாஸி,  மேற்கிந்திய வீரரான அன்டுரு ரசல்ஸ், இந்திய வீரரான மன்பிரட் சிங் உட்பட  பல பிரபல வீரர்கள் விளையாடுகிறார்கள்

தம்புள்ள ஹவாக்ஸ்

தம்புள்ள ஹவாக்ஸ் அணிக்கு
தசுன் சானக்க தலைமை வகிப்பார். அந்த அணியில் டேவிட் மிலர், கர்லோஸ் பிரத்வட்டே, ஸ்மித் பட்டேல் , போல் ஸ்டேரிலிங்  உட்பட  பிரபல வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

காலி கிலாடியேட்யர்ஸ்

லாசித் மாலிங்க தலைமை தாங்கும் இந்த அணியில் செயிட் அப்ரிடி , கொலின் இன்கிராம்   ஹசரத்துல்லா சாஸி, மொகமட் அமிர்  சப்ராஸ் ஹமட் உட்பட இலங்கையின் பிரபல வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

யாழ் ஸ்டாலியன்ஸ்

இதில் விசேட அம்சமாக தமிழ் வீரர்கள் சிலர் இணைக்கப்பட்டுள்ளனர். திசிர பெரேரா தலைமை தாங்கும் அணியில் டேவிட் மாலன், சொயிப் மலிக், உஸ்மான் சின்வாரி,அசிப் அலி ஆகியோருடன் யாழ் வீரர்களான கனகரட்ணம் கபில்ராஜ் , தேவேந்திரன் டினோசன், யேகாந் யஸ்காந்  ஆகியோருடன் மேலும் முக்கிய வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

கண்டி டஸ்கர்ஸ்

குசல் பெரேரா தலைமை தாங்கும் அணியில் டி20 ஹீரோ கிறீஸ் கெய்ல்ஸ்  லியம் பங்கட், வகாப் ரியாஸ், நவின் அல் ஹக் ஆகியோருடன் உள்நாட்டு பிரபல வீரர்களும் இணைந்துள்ளனர்.

administrator

Related Articles