“LPL “முதல் போட்டியில் கண்டி – கொழும்பு அணிகள் மோதுகின்றன!

“LPL “முதல் போட்டியில் கண்டி – கொழும்பு அணிகள் மோதுகின்றன!

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த லங்கா பிரீமியர் லீக் LPL. போட்டி தொடர் இலங்கை நேரப்படி 26 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6 : 50 அளவில் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆரம்பமாகிறது.

மொத்தமாக ஐந்து அணிகள் அதாவது கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம்,  காலி மற்றும் தம்புள்ளை அணிகள் பங்குகொள்ளும் இந்த போட்டி தொடரில் மொத்தமாக 23 போட்டிகள் இடம்பெறும்.

ஒவ்வொரு அணிக்கும் முதல் சுற்றில் 8 போட்டிகளில் விளையாடும் . அதில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
அவர்கள் டிசம்பர் 13 ஆம் 14  ஆம் திகதிகளில் மோதுவார்கள்.

அதில் வெற்றி பெறும் அணி எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி இடம்பெறும்.

இந்த போட்டித்தொடரை சர்வதேச போட்டி ரெப்ரியான ரஞ்சன் மடுகல்ல மற்றும் ICC மத்தியஸ்தரான குமார தர்மேசன ஆகியோர் போட்டிகளை கண்கானிப்பார்கள்.

ஆரம்ப போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணியும் கண்டி டஸ்கர்ஸ் அணியும் மோதுகிறது.

கிங்ஸ் அணிக்கு அஞ்சலோ மெத்தயூஸ் தலைமை தாங்குகிறார்.

கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு குசல் ஜனித் பெரேரா வழி நடத்துகிறார்.

அணியின் முக்கியஸ்தரும் இலங்கை கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்டக்காரரான பார்வீஸ் மவ்ரூப்

LPL போட்டி தொடரை வீட்டில் இருந்து மட்டுமே பார்க்க முடியும்.மைதானத்தில் பார்வையாளர்களுக்கு  அனுமதி இல்லை

administrator

Related Articles