LPL – யாழ் – காலி அணிகள் மோதல்! கண்டிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் வென்ற கொழும்பு !

LPL – யாழ் – காலி அணிகள் மோதல்!  கண்டிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் வென்ற கொழும்பு !

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டனங்கில் நேற்று ஆரம்பமான முதலாவது லங்கா பிரிமியர் லீக் போட்டியில் கொழும்பு அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

https://www.youtube.com/watch?v=9kv3qiTy1Rw

இந்த போட்டி ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இருந்தது இந்த போட்டியில் இரு அணிகளுமே இருநூறு ஓட்டங்களை கடந்ததன் மூலம் ஆடுகளம் எப்படி இருக்கும் என்பதை நீங்களே உணர்ந்திருப்பீர்கள்.

சுருக்கமாக சொல்ல போனால் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி தங்களது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றது.

இதில் குசல் ஜனித் பெரேரா 87 ஓட்டங்களை பெற்றதுடன் அணியை ஸ்தரமான இடத்திற்கு கொண்டு வந்தார்.

ஆனால் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி ஆரம்பத்தில் அருமையாக ஆடிய போதும் நடுவில் சரிந்தது குறிப்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சந்திமால் 80 ஓட்டங்களை பெற்றார்.

ஆனாலும் இறுதி வரை ஆட்டமிழக்கமால் ஆடிய இசுரு உதான தனது IPL அனுபவத்தை பயன்படுத்தி 12 பந்துகளு எதிர்நோக்கி 4 சிக்ஸர்கள் அடங்கலாக 34 ஒட்டங்களை பெற்று முதல் போட்டியை ” டை” அதாவது சம ஓட்டங்களை பெற்று ரசிகர்களை சீட் நுனிக்கு கொண்டு வந்தார்.

இதன் பிறகு சூப்பர் ஓவர் ஆரம்பமானது.

இதிவ் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் 6. பந்துகளில்,16 ஓட்டங்களை பெற்றது ஆனால் அதனை பெற ஆடிய கண்ட டஸ்கர்ஸ் அணி 11 ஓட்டங்களை மட்மே பெற்றது.

இன்றைய போட்டியில் யாழ் – காலி அணிகள் மோதுகின்றன.

administrator

Related Articles