NPL சாம்பியன் பட்டம் வென்றது கொத்மலே சிங்ஸ்

NPL சாம்பியன் பட்டம் வென்றது கொத்மலே சிங்ஸ்


நுவரெலியா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் கொத்மலே கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

லீக் முறையில் நடைபெற்ற இந்த டுவன்ரி-20 போட்டித் தொடரில் இறுதிப் போட்டியில் மஸ்கெலியா சன்ரைஸஸ் அணியை ஐந்து விக்கட்டுகளினால் வீழ்த்தி கொத்மலே கிங்ஸ் அணி வெற்றியீட்டியுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தானிய மஸ்கெலியா அணி 18.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் ஜனார்த்தனன் 29 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தானிய கொத்மலே கிங்ஸ் அணி ஐந்து விக்கட்டுகளை இழந்து 108 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இதில் நனீனன் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
பந்து வீச்சில் சாந்த நான்கு விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இந்த போட்டித் தொடரின் ஆட்ட நாயகனாக சமிந்தன் தெரிவு செய்யப்பட்டார்.

administrator

Related Articles