Sago (சவ்வரிசி) ஊத்தப்பம் செய்வது எப்படி?

Sago (சவ்வரிசி) ஊத்தப்பம் செய்வது எப்படி?

சவ்வரிசி ஊத்தப்பம் காலையில் ஈஸியாக செய்யக்கூடிய ஒரு காலை உணவு morning breakfast இது மிகவும் சுவையாகவும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடியதாகவும் இருக்கும். இந்த சவ்வரிசி ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்ப்போமா.

தேவையான பொருட்கள் : ingredients

சவ்வரிசி – 1 கப்அரிசி – 1 கப் தயிர் – 2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 2கொத்தமல்லி – சிறிதுஉப்பு – 1 1/2 டீஸ்பூன்எண்ணெய் – தேவையான அளவுபச்சை மிளகாய் – 4-6இஞ்சி – 1/2 இஞ்ச்தண்ணீர் – 1 டேபிள் ஸ்பூன்


செய்முறை :


முதலில் சவ்வரிசி மற்றும் அரிசியை நீரில் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பின் அரிசி மற்றும் சவ்வரிசியை நன்கு கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் கிரைண்டரில் அரிசியைப் போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து சவ்வரிசியைக் போட்டு நன்கு நைஸாக அரைக்கவும். அதனை மறக்காமல் தோசை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பின் அரைத்த மாவில் தயிர், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு மற்றும் அரைத்த மிளகாய் கலவையை சேர்த்து கலக்கவும். வேண்டுமென்றால் தண்ணீரை ஊற்றியும் கலக்கிக் கொள்ளலாம்.
பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து அது சூடானதும், அந்த மாவை கல்லில் தடிமனாக ஊத்தாப்பம் போல் விட்டு எண்ணெய் விட்டு, பின் திருப்பிப் போட்டு, இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து எடுக்கவும்.


இப்போது சுவையான சவ்வரிசி ஊத்தப்பம் ரெடி.இதனை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
மீண்டும்  நாளை மற்றுமொரு சமையல் குறிப்புடன்  சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் கிறிஸ்டி.

administrator

Related Articles