12 பேரைக் கொன்ற இந்தோனேசிய பூசாரி

தன்னிடம் மிதமிஞ்சிய பலம் ஒன்று இருப்பதாக கூறி மக்களை ஏமாற்றும் இந்தோனேசிய பூசாரி ஓருவரை அந்த நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் விசேட வழிப்பாடுகளை நடத்துவதாக தெரிவித்து 12 பேரை மண்ணில் புதைத்து கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 45 வயதான ஸ்லேமட் தோஹாரி என்ற சந்தேக நபர் இறந்தவர்களை புதைத்ததாக பொலிஸாரிடம் தெரிவித்தார்.