கனடாவில் வருடாந்த பணவீக்கத்தின் அளவு

கனடாவில் வருடாந்த பணவீக்கத்தின் அளவு குறைவடைந்துள்ளது கடந்த டிசம்பர் மாதம் 6.3 வீதமாக காணப்பட்ட பணவீக்கம் ஜனவரி மாதம்  5.9 சத வீதமே பதிவாகியுள்ளது. உணவுப் பொருட்களின் விலை அதிகரித்த வேளையிலும் பணவீக்கம் குறைவடைந்துள்ளது இவ்வாறானதொரு நிலையில் வங்கிகளின் வட்டி வீதங்கள் குறைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக கூறப்படுகின்றது

பஸ் விபத்து

கனடாவின் க்விபெக் பிரதேசத்தில் பகல் உணவு சேமிப்பு களஞ்சியசாலை ஒன்றுக்குள் பஸ் சென்று விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்தத்தில் மேலும் 6 பிள்ளைகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த பஸ்சின் சாரதி வேண்டுமென்றே இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் அவர் மீது மனித கொலை வழக்கு தொடரப்படலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.