பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்துவதினால் சிரமங்களை எதிர்நோக்கும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, மின் பாவனையாளர்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதுடன், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல், மத ஸ்தலங்கள் மற்றும் அரச கல்வி நிறுவனங்களுக்கு சூரிய மின் தகடுகளை (solar panels) வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார். […]

ஜ ஜாலி

இன்று மற்றும் நாளை ஆகிய தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபைத் தலைவர் தெரிவித்துள்ளார். அதிக மழையுடன் நீரேந்து பிரதேசங்களில் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 331,000 மாணவர்களின் மனித உரிமைகள் கருதி மின்வெட்டுடை அமுல் அமுல்படுத்தாது இருக்க நேற்று முடிவு எடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது. எனினும் பண்டாரவளை ஊவா ஹைலண்ட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும் இரவு வேளையில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுலாகியii குறிப்பிடதக்கது.