ஏற்படவுள்ள அரசியல் மாற்றம் – அனுர

ஜனாதிபதிக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குழுவொன்று அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்துக்காக ஆசனங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பயமில்லை முடிவுகளுக்கே பயம்

அரசாங்கம் தேர்தல் முடிவுகளுக்கு பயந்தே உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தவில்லை எனமக்கள் விடுதலை முன்ணணி குற்றம் சுமத்தியுள்ளது. முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க் பாராளுமன்றில் இன்று (10) உரையாற்றறும் போது இதனை கூறினார். ஆகவே எப்படியாவது தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

JVP

நாட்டை கட்டியெழுப்ப கல்வியால் மாத்திரமே முடியும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க அண்மையில் மாத்தறையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். ஆகவே எதிர்வரும் தேர்தல் இதற்கு முக்கியம் எனவும் அவர் கூறினார்.

திருடர்களை இனம் கண்டு தண்டனை வழங்க தயார்

உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிப் பெற்று திருடர்களை இனம் கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்க தயார் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியால் அதனை செய்ய முடியும் என ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க நேற்று (02) மாலை அம்பாறை பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கூறினார். மக்களின் சொத்துகளை திருடியதும், வீண்விரயமாக்கியதுமே இன்றையே முக்கிய பிரச்சினை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே அவர்களுக்கு தண்டனை வழங்க தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.