ICC இலங்கைக்கு டொலர்

ICC இலங்கைக்கு 200,000 டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5வது இடத்துக்கானது. அவுஸ்திரேலியா – இந்தியா இடையிலான இறுதிப் போட்டி ஜூன் 7ஆம் திகதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் டொலர் பரிசாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

கிரிக்கெட்டுக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலங்கை கிரிக்கெட்டுக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவொன்றை நியமித்துள்ளார். இதன் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவின் உறுப்பினர்களாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களான பர்வீஸ் மஹ்ரூப், அசந்த டி மெல், சரித் சேனாநாயக்க மற்றும் கபில விஜேகுணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

LPL-ஐ – ஜாலி

2023 ஆம் ஆண்டுக்கான LPL போட்டியை ஜூலை 31 முதல் ஓகஸ்ட் 22 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. 5 அணிகள் பங்குபற்றும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் 20 வீரர்கள் உள்ளடக்கப்படுவார்கள் என  ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்க ரெடி: தசுன்

நியூசிலாந்துடனான எதிர்வரும் ஒருநாள் மற்றும் T20 தொடருக்கு  தயாராக இருப்பதாக இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் தசுன் ஷனக்க தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஒக்லாந்தில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டி குறித்து ஷனக்க கூறுகையில், “நாங்கள் நன்கு தயாராக உள்ளோம். மெத்திவ்ஸ் அணியில் இணைந்தது நல்ல விஷயம். இளம் வீரர்கள் அவரிடமிருந்து அறிவைப் பெற முடியும். அதே நேரத்தில் உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற இந்த போட்டியில் வெற்றி பெறுவது […]

இலங்கையணியின் எதிர்பார்ப்பு மங்கியது

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்தது . நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் நோக்கில் இலங்கை அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது. கிறைஸ்ட்சேர்ச்சில் ஆரம்பமான முதலாவது […]

இலங்கைக்கு எதிரான நியூசிலாந்து அணி

இலங்கை அணிக்கு எதிரான 13 பேர் அடங்கிய டெஸ்ட் குழாத்தை நியூசிலாந்து அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அணிக்கு தலைவராக டிம் சௌதி நியமிக்கப்பட்டுள்ளார். அணி விபரம் சௌதி – தலைவர் டீம் சவுதி – தலைவர் டொம் ப்ளண்டெல் பிளேர் டிக்னர் நீல் வோக்னர் ஸ்கொட் ஸ்காட் குகெலெகின் ஹென்றி நிக்கோலஸ் கேன் வில்லியம்சன் வில் யேங் மைக்கல் பிரெஸ்வெல் டெவோன் கொன்;வே மேட் ஹென்றி டோம் லெதம் டேரல் மிட்செல் இரு அணிகளுக்கும் இடையிலான […]

SLC

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்க் சபைக்கான தேர்தலை நடத்துவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நேற்று பிற்பகல் நிறைவடைந்துள்ளது. ஸ்ரீ லங்கா கிரிக்கெட்க் சபைக்கான தேர்தல் எதிர்வரும் மே 20 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது. இதன்போது 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுச் செய்யப்படவுள்ளனர்.

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரத்ன தலைமையில் அணியில 17 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். அணி விபரம். திமுத் கருணாரத்ன (தலைவர்) ஓஷத பெர்ணான்டோ குசல் மெண்டிஸ் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் தனஞ்சய டி சில்வா தினேஷ் சந்திமால் கமிந்து மெண்டிஸ் நிரோஷன் திக்வெல நிர்ஷன் மதுசங்க ரமேஸ் மெண்டிஸ் ஷாமிக்க கருணாரத்ன கசுன் ராஜித லஹிரு குமார அசித்த பெர்ணான்டோ விஷ்வ பெர்ணான்டோ மிலான் ரத்நாயக்க பெப்ரவரி 27 ஆம் திகதி இந்த குழுவினர் […]

இலங்கையணி வீரர்கள் நுவரெலியாவில்…

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் நுவரெலியா ரதெல்ல கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சிகளில் ஈடுப்பட்டனர். திர்வரும் நியூசிலாந்து தொடருக்கு முன்னதாக இந்த பயிற்சி முன்னெடுக்கப்பட்டது. தம்புல்ல கிரிக்கெட் கழகத்தினால் நிர்வகிக்கப்படும் நுவரெலியா ரதெல்ல கிரிக்கெட் மைதானம் தேசிய அணியின் பயிற்சி நடவடிக்கைக்கு வழங்குதல் என்ற இணகக்ப்பாட்டுக்கு அமைய மேற்படி மைதானம் செப்பனிடப்பட்டதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.  

சந்திக ஹத்துருசிங்க

பங்களாதேஷ் அணியின் ODI மற்றும் டெஸ்ட் அணியின் பிரதான பயிற்சியாளராக இலங்கையணியின் முன்னாள் வீரர் சந்திக ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹத்துருசிங்க 2014 தொடக்கம் 2017 வரை இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளராக கடமையாற்றினார். பின்னர் ஹத்துருசிங்க அவுஸ்திரேலிய பிராந்திய அணியான நிவ் சவுத்வேல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக கடமையாற்றினார். பங்களாதேஷ் அணியின் பிரதம பயிற்சியாளராக கடமையாற்றிய ரசல் டொமினிகோ அண்மையில் பதவி விலகியமை குறிப்பிடதக்கது.