U23 கிரிக்கெட் போட்டித்தொடரில் புளூம்பீல்ட் அணி படுதோல்வி!!!

U23 கிரிக்கெட் போட்டித்தொடரில் புளூம்பீல்ட் அணி படுதோல்வி!!!

இலங்கையின் முன்னனி கழகங்களின் 23 வயதுக்குட்பட்ட  இளைஞர் போட்டித்தொடரில் CCC அணி 8 விக்கெட்டுகளால் வெற்றீட்டியுள்ளது.

50 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட இந்த போட்டித்தொடரில் சீ.சீ.சீ அணியும் புளூம்பீல்ட் அணியும் மோதின .

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய புளூம்பீல்ட் அணி 41.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 97 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

அதேவேளை SSC அணிக்கும்  KYCC அணிக்கும் இடையிலான போட்டியில் SSC அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

சீ.சீ.சீ அணியின் பந்துவீச்சாளரான  அமேஸ் டி சில்வா 12 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

வெற்றி இலக்கான 98 ஓட்டங்களை சீ.சீ.சீ அணி தனது இரண்டு விக்கெட்டுகளை 13.1 ஓவர்களில் பெற்றது.

இதில் அதிரடியாக ஆடிய மலிந்த மதுரங்க 30 பந்துகளில் 3 சிக்ஸர்களையும் 6 பவுண்டிரிகளையும் அடித்து 55 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார்.

இனி இன்று நடைப்பெற்ற ஏனைய போட்டிகளை பார்ப்போம்.

கோல்ட்ஸ் மைதானத்தில்  கோல்ட்ஸ் அணிக்கும் மூர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் கோல்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மூர்ஸ் அணி 36.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 151 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல்ட்ஸ் அணி 36. 2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

சரே மைதானத்தில் நடைப்பெற்ற போட்டியில் சரேஸயன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் களுத்துறை அணி 65 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

அதேபோன்று சிலாபம் மெரியன்ஸ் அணிக்கும் பாணதுறை அணிக்கும் இடையிலான போட்டியில் சிலாபம் மெரியன்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றீட்டியது.

தமிழ் யூனியனுக்கும் காலி கிரிக்கெட் அணிக்கும் இடையிலான போட்டி பி சரா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதில் தமிழ் யூனியன் 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

administrator

Related Articles