இன்று (27) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுறுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
அதற்கமைய, அது தொடர்பான வர்த்தமானி அச்சீட்டு பணிகளுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.
பெப்ரவரி 8 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும் என ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.