அமெரிக்ககாவில் டென்னிசி மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் பொதுமக்கள் தங்களது பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இருப்பினும், அதுவே அங்கு பல சந்தர்ப்பங்களில் விபரீதத்திற்கு வழி வகுக்கிறது. அந்த துப்பாக்கியை வைத்துக்கொண்டு பலர் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
சமீப காலமாக கடைகள், வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.