அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஆஸ்பெனில் ஏராளமான பனிமலைகள் அமைந்துள்ளன.
இந்த நிலையில் அங்குள்ள ஒரு பனி மலையில் வீரர்கள் பலர் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீசிய பனிப்புயலால் அங்கு பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது.
அதில் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்த வீரர்கள் சிக்கி கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும் பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.