அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி ஜில் பிடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும் ஜனாதிபதி ஜோபிடனுக்கு தொற்று இல்லை என பரிசோதனையில் தகவல் தெரியவந்துள்ளது.

அவரது மனைவி ஜில் பிடனுக்கு கொவிட் தொற்று இருந்தபோதிலும், ஜி-20 மாநாட்டின் அட்டவணையின்படி ஜனாதிபதி ஜோ பிடன் இந்தியா செல்வார் என கூஉறப்படுகின்றது.

அத்துடன் திட்டமிட்டபடி மாநாட்டில் கலந்து கொள்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வரும் 7ஆம் திகதி பிடன் இந்தியா செல்லவுள்ளதுடன் செப்டம்பர் 8 ஆம் திகதி புதுடெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டையொட்டி அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு சந்திப்பையும் நடத்தவுள்ளார்.

மேலும் செப்டம்பர் 9ம் திகதி ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கலந்துகொள்ளவுள்ளார்.