ஆப்கானிஸ்தான் மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஹெராட் நகருக்கு அருகே 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
ஏற்கனவே நிலநடுக்க பாதிப்பால் 4,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.