இங்கிலாந்து -அவுஸ்திரேலியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் பர்மிங்காமில் தொடங்குகிறது.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி கடந்த வாரம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற உற்சாகத்துடன் களமிறங்குகிறது.
இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்ட பாணி, வலுவான அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்கு எதிராக எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
இங்கிலாந்து சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவை 3-2 என 2015-ல் வீழ்த்தியது.
அதன்பின் அவுஸ்திரேலியாவை வென்றதில்லை.
அதேவேளையில் 2017-18 மற்றும் 2021-22-ல் அவுஸ்திரேலியாயா சொந்த மண்ணில் 4-0 என இங்கிலாந்தை வென்றுள்ளது.