அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் மீண்டும் உலகின் பணக்கார நகரமாக தெரிவாகியுள்ளது.

கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு உலகின் பணக்கார நகரங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க நகரத்தில் தற்போது 340,000 கோடீஸ்வரர்கள் வாழ்கிறார்கள்,

மேலும் பில்லியனர்களின் எண்ணிக்கை 58 என்று கூறப்படுகிறது.

உலகின் பணக்கார நகரங்களில், 290,300 மில்லியனர்கள் வசிக்கும் ஜப்பானின் டோக்கியோவுக்கு இரண்டாவது இடம கிடைத்துள்ளது.

மேலும் 285,000 மில்லியனர்கள் வசிக்கும் அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோ மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

உலகின் 10 பணக்கார நகரங்களில் லொஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ உள்ளிட்ட 04 அமெரிக்க நகரங்கள் இடம்பிடித்திருப்பது சிறப்பம்சமாகும்.

இதேவேளை, சீனாவின் பீஜிங் மற்றும் ஷாங்காய், இலண்டன், சிங்கப்பூர், ஹொங்காங் மற்றும் சிட்னி ஆகியவை 2023 ஆம் ஆண்டில் உலகின் 10 பணக்கார நகரங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *