ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. எனவே, ஆசிய கோப்பை தொடரை இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்திற்கு மாற்றலாமா? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
பஹ்ரைனில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் இடம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
எனினும், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) போட்டி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.