பெருந்தொகை ஒன்றைப் பெற்றுக்கொண்டு இந்திய புலம்பெயர்வோரை கனடா எல்லை வழியாக அமெரிக்க எல்லைக்குள் கடத்தியதாக, அமெரிக்கப் பொலிசாரிடம் சிக்கிய இந்தியர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
கனடா எல்லையில் குளிரில் உறைந்து இறந்து கிடந்த இந்தியர்கள்
சென்ற ஆண்டு, ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, கனடா அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக பலியான சம்பவம் நினைவிருக்கலாம்.
அவர்களை அமெரிக்காவுக்குள் அனுப்ப முயன்றதாக கடத்தல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அந்த நபரின் பெயர் ரஜிந்தர் பால் சிங் அவர், சட்டவிரோதமாக அமெரிக்காவில் வாழும் இந்தியக் குடிமகன் ஆவார்.
கடந்த மே மாதம், ரஜிந்தர் அமெரிக்காவின் வாஷிங்டனில் கைது செய்யப்பட்டார். அவரது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதில், அவர் இந்தியர்களை கனடா வழியாக அமெரிக்கா கடத்த இருப்பது தெரியவந்தது. அந்த நேரத்தில்தான் பட்டேல் குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள்.
கைது செய்யப்பட்ட ரஜிந்தர், 500,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணத்தைப் பெற்றுக்கொண்டு கனடா வழியாக அமெரிக்காவுக்குள் மக்களைக் கடத்துவதில் தனக்குப் பங்கிருப்பதை தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ரஜிந்தர், 500,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணத்தைப் பெற்றுக்கொண்டு கனடா வழியாக அமெரிக்காவுக்குள் மக்களைக் கடத்துவதில் தனக்குப் பங்கிருப்பதை தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது ரஜிந்தர் மனிதக் கடத்தல் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மே மாதம் 9ஆம் திகதி அவருக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்திய புலம்பெயர்வோரை கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்கு கடத்தியதாக ஒப்புக்கொண்ட இந்தியர்