இந்திய வம்சாவளி தமிழ் மக்களை இலங்கைத் தமிழர் என அடையாளப்படுத்த பதிவாளர் திணைக்களத்தால் முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ்
அண்மையில் பதிவாளர் நாயகத்தால் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் மாவட்ட பதிவாளர்க்கும் மேலதிக மாவட்ட பதிவாளர்க்கும் அனுப்பப்பட்டுருகின்ற சுற்றுநிறுபத்தில 11,1 /2023 என்ற இலக்கத்தை கொண்ட சுற்றுநிறுபத்தின் மூலமாக அரசாங்க காரியாலயங்கள், பிறப்புச்சான்றிதழ் மற்றும் ஆள் அடையாளபடுத்த கூடிய அனைத்து ஆவணங்களிலும் இனத்தை குறிப்பிடும் பொழுது எங்களுடைய இந்திய வம்சாவழி தமிழ் மக்களையும் முஸ்லீம் மக்களையும் இந்திய தமிழர் சோனகர் என்பதற்க்கு பதிலாக அந்த பதத்தினை நீக்கி இலங்கை தமிழர் சோனகர் என குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனுடைய பிரதி செயலாளர் அரச நிறுவாக உள்நாட்டு அலுவலக மாகாண சபைகள் அமைச்சுக்கும் அனுப்பப்பட்டுருகின்றது
மலையக மக்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலே வன்மையான எனது கண்டனத்தை தெரிவித்துகொள்கிறேன். இது என்னுடைய இனத்தையும் சமூகத்தையும் என்னுடைய முஸ்லீம் சமூக மக்களுடைய கௌரவம் அனைத்தையும் ஒரு கேள்விக்குறியாக்குகின்ற சுற்றுநிறுபமாகவேநான் இதனை காண்கின்றேன் .
200 வருடம் 5 பரம்பரையாக வாழ்ந்துந்துகொண்டிருக்கின்ற இந்திய வம்சாவழி மக்கள் இந்திய அரசாங்கத்தின் பயனாக பல நன்மைகளை பெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த நாடு இவ்வாறான ஒரு மோசமான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்
ஆகவே இது சம்பந்தமாக
கௌரவ பிரதம மந்திரி அவர்களுக்கு தெரிவித்துகொள்வதாவது உடனடியாக இதனை வாப்பஸ் பெறவேண்டும். அதுமட்டுமல்லாது எழுத்து மூலமாக அதிமேதகு ஜானதிபதி அவர்களுக்கும் நான் தெரிவித்திருகின்றேன் அண்மையிலே தொழிலமைட்சியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலே முதலாளிமார் சம்மேளனத்தினுடைய ஒரு முக்கிய பிரதிநிதி எங்களுடைய மலையக மக்களை பெருந்தோட்ட தொழிலார்களை பார்த்து அவர்கள் தீவிரவாதிகள் என குறிப்பிட்டதை நான் வன்மையாக கண்டித்து அதனை வப்பாஸ் பெறவும் செய்தேன் ஆகவே இவ்வாறான செயற்பாடுகள் ஆங்காங்கே நடந்துகொண்டிருகின்ற போது இதனை நாங்கள் வெறுமனே பார்த்துகொண்டிருகின்ற ஜீரணித்து கொள்ளகூடிய சக்தி எங்களுக்கு கிடையாது .
இத்தகைய விடயங்களின் மூலமாக மக்களை வேறு திசைக்கு திசை திருப்புவது போல் நான் காணுகின்றேன் .
பாராளுமன்றத்திற்க்கும் இவ்விடயம் தொடர்பில் அறிவுறுத்தப்படவில்லை ஆலோசித்திருக்கவில்லை எந்த பததோடு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது என்பதை பதிவாளர் நாயகம் திரு PSD அபயரத்னா அவர்களிடம் நான் கேள்வியையும் தொடுகின்றேன் என கருத்துரைத்தார்