சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் IPL இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று இரவு 7.30க்கு தொடங்க இருந்தது.
ஆனால் மழையால் இறுதிப் போட்டி பாதிக்கப்பட்டது.
இதனால் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
மாற்றுதினமான இன்று IPLL இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இன்றைய இறுதிப் போட்டியும் ஒரு வேளை மழையால் பாதிக்கப்பட்டால் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மழையால் இரவு 9.40 மணிக்கு முன்பு ஆட்டம் தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படாமல் விளையாடப்படும்.
மழையால் முழுவதுமாக பாதிக்கப்பட்டால் டோனியால் 5வது ஐ.பி.எல். கோப்பை கனவு நனவாகாமல் போய்விடும்.
தனது கடைசி தொடரில் கோப்பையுடன் விடைபெறும் ஆர்வத்தில் டோனி உள்ளார்.