ஐரோப்பிய நாடான போஸ்னியா-ஹெர்ச்கோவினாவில் இன்ஸ்டா நேரலையில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுளது.

ஐரோப்பாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு நாடு போஸ்னியா-ஹெர்ச்கோவினா. இதன் வடகிழக்கில் உள்ளது க்ரடகாக் (Gradacac) நகரத்தில் நெர்மின் சுலெமனோவிக் (Nermin Sulejmanovic) எனும் ஒரு உடற்பயிற்சியாளர் வசித்து வருகின்றார்.

இவர் மீது போதை பொருள் கடத்தல் மற்றும் காவல்துறை அதிகாரியை தாக்கியது என பல வழக்குகள் உள்ளன. நேற்று காலை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் உள்ள தனது கணக்கில், நெர்மின் “இன்று ஒரு கொலையை நேரில் காண்பீர்கள்” என குறிப்பிட்டு ஒரு வீடியோ பதிவை நேரலை செய்ய தொடங்கினார்.

இதனை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்து, அடுத்து என்ன நடக்குமோ என்ற பதைபதைப்புடன் நேரலைய்பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அவர் ஒரு துப்பாக்கியை எடுத்து ஒரு பெண்ணின் நெற்றி பகுதியில் வைத்து நெர்மின் சுட்டார்.

தகவலறிந்து காவல்துறையினர் அவரை தேடி அவர் இருக்குமிடத்தை கண்டறிந்து அவரை கைது செய்ய விரைந்தபோது நெர்மின் தப்பித்து ஓடினார்.

தப்பிக்கும் வழியில் மேலும் ஒரு ஆணையும் அந்த ஆணின் மகனையும் சுட்டு கொன்றார். அதனையும் அவர் வீடியோவாக பதிவிட்டார்.

தான் காவல்துறையிடம் சிக்காமல் ஓடி வரும் போது, வழியில் இருவரை சுட்டதாக அவர் வெளிப்படையாக கூறினார். கடைசியில் காவலர்கள் அவரை நெருங்கும் முன்பு நெர்மின் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்துவிட்டார்.

அதேவேளை சுமார் 12,000 பேர் நெர்மின் வெளியிட்ட இந்த வீடியோவை நேரலையில் பார்த்தனர். அதில் 126 பேர் இந்த வீடியோவை ‘லைக்’ செய்துள்ளனர். இன்ஸ்டாகிராம் நிறுவனம் இந்த வீடியோவை உடனே நீக்கியது.

ஆனாலும், இந்த கொடூர சம்பவத்தை ஆதரித்து இன்ஸ்டாகிராமில் கருத்துக்கள் தெரிவித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய, காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *