நாடளாவிய ரீதியில் இன்று வெசாக் தின கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் காணப்படும் பௌத்த வணக்கஸ்த்தலங்களில் விஷேட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதேவேளை மலையகத்தின் பல பாகங்களிலும் வெசாக் தின கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன.

அந்த வகையில் அட்டன், கொட்டகலை, தலவாக்கலை, மஸ்கெலியா, பொகவந்தலாவ, அக்கரப்பத்தனை, நுவரெலியா ஆகிய பகுதிகளிலும் வெசாக் தின கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்வின் போது இன மத பேதமின்றி கிராம மக்கள் தோட்டப்புற மக்கள், பொலிஸ் அதிகாரிகள், முஸ்லிம், இந்து மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, அட்டன் நீக்ரோதாரம விகாரையிலும் வெசாக் தின விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு, கொண்டாட்டங்களும் இடம்பெற்றன.

மலையகத்தில் எவ்வித பாரபட்சமும் இன்றி வெசாக் பண்டிகை கொண்டப்பட்டு வருகின்றமை மேலும் குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *