ஐக்கிய இராச்சியம் இலங்கை போன்ற நாடுகளுடன் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என அந்நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் மெத்திவ் ஆஃப்போர்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஐக்கிய இராச்சியம் ஒப்பந்த அடிப்படையில் ஆதரவளிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் பிரித்தானியா வழங்கிய உதவிகள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் விசேட அமர்வு இடம்பெற்றது.
இதன்போது கன்சர்வேட்டிவ் கட்சி எம்பி மெத்திவ் ஆஃப்போர்ட் இதளை கூறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.