ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இறுதி ஒரு நாள் போட்டி இன்று (07) ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக இருப்பதால் இதுவரை இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.
முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 06 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.