இலங்கை கிரிக்கெட்டுக்கான (SLC) ஆலோசனைக் குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்துள்ளார்.
இதன் தலைவராக முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குழுவின் உறுப்பினர்களாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களான பர்வீஸ் மஹரூப், அசந்த டி மெல், சரித் சேனாநாயக்க மற்றும் கபில விஜேகுணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.