உக்ரைனில் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ரஷ்யாவை எதிர்த்து போரிட உதவியாக உக்ரைனுக்கு கூடுதலாக ட்ரோன்கள் வழங்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவிக்கையில், உக்ரைனில் படைகளை திரும்பப்பெற்று உடனடியாக போரை நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் புடினை வலியுறுத்தினார்.
இதனிடையே, ஓராண்டாக போரை எதிர்கொள்ளும் உக்ரைனுக்கு ஆதரவாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றுள்ளனர்.