துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட் கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,000 தாண்டியுள்ளது.
இதனால் துருக்கியின் அவசர நிலை10 மாயை துருக்கி ஜனாதிபதி எர்டோகன் அறிவித்துள்ளார்.
கட்டிட இடிபாடுகளில் இருந்து இறந்த வர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப் பட்டு வருகின்றன.
இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 20,000-மாக அதிகரிக்கலாம். 2 கோடியே 30 லட்சம் பேர்பாதிக்கப்படலாம். உலக நாடுகள் துருக்கிக்கு விரைந்து உதவ வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேவேளை, பூகம்பம் பதிவான இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீள கட்டியெழுப்புவது சவாலாக மாறியுள்ளதாக மீட்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள அறிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
மேற்குறித்த நாடுகளில் பூகம்பம் பதிவாகி சுமார் 72 மணித்தியாலங்களுக்கு மேலாகியும் குடி நீர், மின்சாரம, தற்காலிக குடியிருப்புகள், முறையான மருத்துவ வசதிகள் கிடைக்காதுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.