பிரதமர் மோடி எகிப்து நாட்டுக்கு 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். அங்கு கெய்ரோ நகரில் ரிட்ஜ் காரல்டன் ஓட்டலில் அவருக்கு எகிப்து வாழ் இந்திய மக்கள் சந்தித்து அவருக்கு மூவர்ணக்கொடிகளை அசைத்தும், “மோடி மோடி”, ” வந்தே மாதரம்” எனவும் உற்சாகக் குரல் எழுப்பி வரவேற்பு அளித்தனர்.

ஜீனா என்ற எகிப்து பெண் புடவை அணிந்து வந்து பிரதமர் மோடியை பிரபலமான “யே தோஸ்தி ஹம் நகி” என்ற ‘ஷோலே’ படப்பாடலைப் பாடி வரவேற்றார்.

தான் இந்தியாவுக்கு வந்திராதபோதும், சிறிதளவில் இந்தி தெரியும் என்றும் அவர் பிரதமர் மோடியிடம் கூறினார்.

அதனால் கவரப்பட்ட பிரதமர் மோடி, அந்தப் பெண்ணிடம், “நீங்கள் எகிப்தின் மகளா அல்லது இந்தியாவின் மகளா என்று யாராலும் சொல்லி விட முடியாது” என்று கூறி பாராட்டினார்.

தொடர்ந்து எகிப்துவாழ் இந்தியர்களை பிரதமர் மோடி குழு, குழுவாக சந்தித்துப்பேசினார். அப்போது அவர்கள் பிரதமர் மோடியிடம், ” நீங்கள்தான் இந்தியாவின் நாயகன்” என புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்கள்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *