ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதும், தன் மீது குற்றம் சுமத்துவது நியாயமற்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.