எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த திகதி குறிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
வாக்குச்சீட்டு அச்சிடல் உள்ளிட்ட சில சிக்கல்கள் காரணமாக திட்டமிட்டபடி மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாமல் போனதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, தேர்தலை நடத்துவதற்கு சாதகமான தினமாக ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி காணப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தேர்தல் திகதி குறித்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் தௌிவுபடுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.