ஒன்றாரியோவில் ஹோட்டல் பில்லை செலுத்துமாறு கோரிய உரிமையாளர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
ஒன்றாரியோவின் ஓவன் சவுன்ட் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
44 வயதான சாரிபுர் ரஹ்மான் என்ற நபரை, சில வாடிக்கையாளர்கள் தாக்கிக் கொன்றுள்ளனர். உட்கொண்ட உணவிற்கான பில்லை செலுத்துமாறு மூன்று பேரிடம் ரஹ்மான் கோரியுள்ளார்.
எனினும், இதன் போது ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் மரணத்தில் முடிந்துள்ளது. கடந்த 17ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.