நூருல் ஹுதா உமர்
கத்தார் சபாரி மால் நடாத்திய மாபெரும் புகைப்பட போட்டியான “FRAMES SEASON 6” இல் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கத்தார் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனும் தலைப்பின் கீழ் போட்டி நடத்தப்பட்டது. இதில் இலங்கையில் கண்டி மாவட்டம் வடதெனிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஹூபைப் முஸம்மிலின் புகைப்படம் தெரிவு செய்யப்படுள்ளது.
இவர் தன் சிறு வயதிலிருந்தே புகைப்பட துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் பல போட்டிகளிலும் பங்கு பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இவைகள் மாத்திரமின்றி ஒட்டு மொத்த இந்திய திரை உலக பிரபலங்களும் இணைந்த மிக பிரம்மாண்டமான நிகழ்வான தமிழ் மகன் விருதில் புகைப்பட கலைஞராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் எமது ஸ்கை தமிழ் ஊடகத்தின் ஊடகவியலாளராகவும் புகைப்படபிடிப்பளாராகவும் மற்றும் அக்கினிச் சிறகுகள் சஞ்சிகையின் முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளராகவும் பணியாறியுள்ளார்.
தற்போது இவர் கத்தாரில் வடிமைப்பளாராக தொழில் புரிந்து கொண்டு அவருடைய திறமையை புகைப்படங்கள் மூலம் வெளிக்காட்டி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இப் பிரபல புகைப்பட போட்டியில் சுமார் 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.அதில் பிரதானமாக சுமார் முப்பது புகைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டன. தெரிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் கத்தார் அபு ஹமூரில் உள்ள சபாரி மாலில் ஆகஸ்ட் 19 தொடக்கம் ஆகஸ்ட் 30 வரை மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இக் கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டுள்ள புகைப்படங்களுக்கு நடுவர்களால் தெரிவுசெய்யப்பட்டு பணப்பரிசு வழங்கப்படும்.
