கனடாவில் வாசனை திரவியங்களை திருடிய சிலரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
ஒன்றாரியோவின் எலியோட் லேக் பகுதியில் கோலோன் மற்றும் பர்வியூம் வகைகளை களவாடிய நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
களவாடப்பட்ட பொருட்களின் மொத்தப் பெறுமதி சுமார் ஆயிரம் டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.மூன்று பேரைக் கொண்ட கும்பல் ஒன்று இவ்வாறு களவாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வர்த்தக நிலையத்தின் பணியாளர்களை இரண்டு சந்தேக நபர்கள் திசை திருப்பியதாகவும் மூன்றாம் நபர் பொருட்களை களவாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களை அடையாளம் காணவும் கைது செய்யவும் உதவுமாறு ஒன்றாரியோ பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.