கனடாவில் 12 டாலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு ஜோடி ஓவியம் தற்பொழுது சுமார் 41000 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
1967 ஆம் ஆண்டில் கனடாவின் நோவா ஸ்கோட்டியாவைச் சேர்ந்த ஒர் தம்பதியினர் 12 டாலர்களுக்கு இந்த ஓவியங்களை கொள்வனவு செய்துள்ளனர்.
இந்த தம்பதியினரின் உறவினர் ஒருவர் தற்பொழுது குறித்த ஓவியங்களை ஏலத்தில் விற்பனை செய்துள்ளார்.
நியூ ஹம்பேக் ஏல விற்பனையில் இந்த ஓவியத்தை விற்பனை செய்துள்ளார்.
கிராமிய ஓவியங்கள் விற்பனை செய்யப்படும் இந்த ஏல விற்பனையில் இந்த ஓவியங்கள் உள்ளிட்ட 290 ஓவியங்கள் ஏலத்தில் விடப்பட்டது.
பிரபல ஓவியக் கலைஞர் Maud Lewis இன் ஓவியமே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மிகவும் வறுமையில் வாழ்ந்த லுயிஸ் தனது ஓவியங்களை ஐந்து டாலர்களுக்கு அந்தக் காலத்தில் விற்பனை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் ஓர் ஓவியம் அண்மையில் 3,50,000 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.