இலங்கையில் இடம்பெற்ற மோதல்களின் போது இடம்பெற்ற இனப்படுகொலை குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த அறிக்கையை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.
கனேடிய பிரதமர் மே 18 ஆம் திகதியை தமிழர் இனப்படுகொலை நாளாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சு, ஒரு நாட்டின் முக்கிய தலைவர் ஒருவரின் இத்தகைய பொறுப்பற்ற மற்றும் பக்கச்சார்பான அறிக்கைகளால் கனடாவிலும் இலங்கையிலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக ஒற்றுமையின்மையும் வெறுப்பும் பரவி வருவதாக கூறுகிறது.
இலங்கையில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டம் தொடர்பாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.