காசல்ரி நீர்த்தேக்கத்தில் 8 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மீன் பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையில் இந்த 8 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர் ஒருவர் மலைப்பாம்பு சிக்கியிருப்பதனை கண்டு வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து மலைப்பாம்பினை கரைக்கு கொண்டு வந்தபோது அது உயிரிழந்துள்ள நிலையில் பாம்பினை புதைக்குமாறு வன பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.