LPL2023 தொடரின் 14வது T20 போட்டி நேற்று கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைப்பெற்றது.
காலி டைட்டன்ஸ் மற்றும் தம்புள்ளை ஆரோரா அணிகள் மோதின . இதில் தம்புள்ள ஆரோரரா அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி தனது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை பெற்றது.
காலி அணித்தலைவர் தசுன் சானக்க 36 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் துஷன் ஹேமந்த 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
பதிலுக்கு வெற்றி இலக்கான 134 ஓட்டங்களை பெறும் நோக்கில் ஆடிய தம்புள்ள அணி 17. 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
துடுப்பாட்டத்தில் அவிஸ்க பெர்ணான்டோ 49 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்களை பெற்று ஆட்டநாயகனாக தெரிவானார்.
இதன்படி இதுவரை நடைப்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் தம்புள்ள அணி முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.