ICC 3 விதிகளில் மாற்றம் செய்துள்ளது.
மாற்றப்பட்ட ICC விதிகள் ஜூன் 1 முதல் அமலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதி 1: நடுவர் இனி சாப்ட் சிக்னல் அளிக்காமல் 3-ம் நடுவருடன் ஆலோசிக்க வேண்டும்.
விதி 2: வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள், ஸ்டம்புக்கு அருகில் உள்ள கீப்பர், பேட்ஸ்மேனுக்கு அருகில் உள்ள பீல்டர்கள் தலைக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.
விதி 3: ப்ரீ ஹிட் பந்தில் பந்து ஸ்டம்பில் பட்டாலும் இனி பேட்ஸ்மேன்கள் ரன் ஓடலாம். அந்த ரன்கள் பேட்ஸ்மேன் கணக்கில் சேரும்.
இந்த 3 விதிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டிக்கு பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.