நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவுச் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெலின்டன் நகரில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நியூசிலாந்து ஆளுநர் முன்னிலையில் கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி 44 வயதான கிறிஸ் ஹிப்கின்ஸ் நியூசிலாந்தின் 41 ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார்.
முன்னாள் பிரதாம் ஜெசிந்தா ஏர்டன் அண்மையில் பதவி துறந்த நிலையிலேயே கிறிஸ் ஹிப்கின்ஸ் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.