கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கெனிஸிங்டன் சந்தையில் கொலேஜ் ஸ்ட்ரீட் மற்றும் சப்ரினா அவென்யூ ஆகினவற்றிற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
சிலருக்கு இடையில் கைகலப்பு இடம் பெற்றதாகவும் அதன் போது நபர் ஒருவர் துப்பாக்கியை எடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அறிந்து கொண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதன் போது காயமடைந்த நிலையில் இருந்த நபர் ஒருவரை மீட்டு போலீசார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.