பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கொலை செய்த அவுஸ்திரேலியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Tatiana Dokhotaru (34), 2012ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். அவரது கணவர் ஒரு அவுஸ்திரேலியர். அவரது பெயர் Danny Zayat (28). தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறான்.

மே மாதம் 27ஆம் திகதி, Tatianaவின் உயிரற்ற உடல் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது

தன்னை, தன் கணவர் தாக்குவதாக Tatiana பொலிசாருக்கு தகவலளித்தும், 20 மணி நேரத்துக்குப் பிறகுதான் பொலிசார் அந்த வீட்டுக்குச் சென்றுள்ளார்கள்.

தான் எங்கிருக்கிறேன் என்பதை Tatiana கூறும் முன் அவரது மொபைல் அழைப்பு துண்டிக்கப்பட்டதால் பொலிசார் அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *