நாட்டின் அரசியலமைப்பை சகோதரனுக்காக மாற்றிய உலகின் ஒரே ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச இடம்பிடித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சுதந்திர மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை வெளியிடும் நிகழ்வு நேற்றைய தினம் பத்தரமுல்ல பகுதியில் இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சர்கள் தோல்வியடைவதற்கு குடும்ப ஆட்சி பிரதான காரணமாக அமைந்தது,ஆகவே 2019ஆம் ஆண்டுக்கு பிறகு பாடம் கற்றுக்கொண்டிருப்பார்கள் என எதிர்பார்த்தோம்.
அமைச்சரவையில் ராஜபக்சர்களின் ஆதிக்கம்
இருப்பினும் எமது நிலைப்பாடு இறுதியில் தவறானது. 2020ஆம் ஆண்டுக்கு பின்னர் அமைச்சரவையில் ராஜபக்சர்கள் தான் அதிக ஆதிக்கம் கொண்டிருந்தார்கள்.
சிரேஷ்ட அமைச்சர்கள் ராஜபக்சர்களின் இளவரசரான நாமல் ராஜபக்சவிடம் ஆலோசனை பெற வேண்டிய சூழலை கோட்டாபய ராஜபக்ச ஏற்படுத்தினார்.