டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை ஆய்வு செய்து கொண்டிருந்த டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து சிதறி அதில் இருந்த ஐந்து பயணிகளும் இறந்ததை அமெரிக்க கடலோர காவற்படை உறுதி செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இறந்தவர்களின் சடலங்களை கண்டுபிடிப்பது கடினம் எனவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
5 பயணிகளை ஏற்றிக்கொண்டு சிறிய அளவிலான டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலுடன் போலார் பிரின்ஸ் கப்பல் கிழக்கு கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் துறைமுகத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணத்தைத் தொடங்கியமை குறிப்பிடதக்கது.