ஏமன் தலைநகர் சனாவில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரமழான் பண்டிகைக்காக சனா மக்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறந்தவர்களில் குழந்தைகளும் பெண்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறப்படுகிறது.

சன நெரிசலில் சிக்கி 322 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அந்நாட்டு சுகாதார அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.

இது குறித்து ஏமன் நாட்டின் போராட்டக் குழுவான ஹவுத்தி போராளிகள் அரசின் அலட்சியத்தால் அப்பாவி உயிர்கள் பறிபோனதாக செய்தி வெளியிட்டது.

அந்தச் செய்தியில் ஆங்காங்கே சடலங்கள் வரிசையாக குவித்துவைக்கப்பட்டுள்ளது காட்டப்பட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்நாட்டில் 3ல் 2 பங்கு மக்கள் (2.1 கோடி) உதவி மற்றும் பாதுகாப்பு தேவைப்படுபவர்களாக உள்ளனர்.

அவர்களில் 1.7 கோடி மக்கள் வறுமையின் பிடியில் வாடுகின்றனர்.

இந்த நிலையில், தலைநகர் சனாவில் வர்த்தகர்கள் சிலர் ரமழான் பண்டிகைக்காக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *