நூருல் ஹுதா உமர்.
மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீலங்கா மற்றும் YMMA – மாவடிப்பள்ளி கிளையின் ஏற்பாட்டில் 21. 08. 2023 அன்று சாய்ந்தமருது சைனிங் ஸ்டார் பெண்கள் அமைப்பின் காரியாலயத்தில் பெண்களுக்கான ஜனாஸா அடக்கும் முறை சம்பந்தமான செயன்முறை கருத்தரங்கு நடைபெற்றது.
மனித மேம்பாட்டு அமைப்பின் கலாச்சார பிரிவின் தலைவர் எ.எம்.எ. அஸ்ரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளராக மாவடிப்பள்ளி YMMA யின் செயலாளர் ஏ. அஷ்ரப் (மௌலவி) கலந்து கொண்டு விரிவுரையாற்றினார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது 14 ம் பிரிவின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். அபுல் ஹுதா , சைனிங் ஸ்டார் பெண்கள் அமைப்பின் தலைவி பிரோஸா காரியப்பர், செயலாளர் ஆயிஷா சித்தீக்கா, பொருளாளர் தஸ்னீம் காரியப்பர் மற்றும் மனித மேம்பாட்டு அமைப்பின் கலாச்சார பிரிவின் துணைத் தலைவர் எ. எல். றில்வான், உயர் பீட உறுப்பினர் எம். முபீத் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது இஸ்லாமிய ஜனாஸா அடக்கும் முறை சம்பந்தமான பல விடயங்கள் செயல்முறை மற்றும் கேள்வி பதில் ரீதியாக கலந்து கொண்ட பிரதிநிதிகளுக்கு விரிவுரை அளிக்கப்பட்டவை குறிப்பிடத்தக்க விடயமாகும்.