சீனாவின் வடமேற்கு நகரமான யின்சுவானில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த விபத்தில் காயமடைந்த ஏழு பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு 8.40 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
பார்பிக்யூ உணவகம் ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திரவ எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடி விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.