சூடானில் நிலவும் உள் நாட்டுப் போர் காரணமாக அங்கு இளம் பெண்களும் , கர்ப்பிணி பெண்களும் தீவிர நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் 20 ஆண்டுகால வன்முறைச் சுமைகளை பெண்கள் சுமந்து வருகின்றனர்.
ஏப்ரல் 25, 2003 அன்று சூடானில் டார்ஃபர் மோதல் ஏற்பட்டதில் சூடான் விடுதலை இயக்கம் சூடான் ராணுவப் படைகளைத் தாக்கியதில் இருந்து அந்நாட்டின் அரசியல் நிலப்பரப்பிற்குள் அதிகாரப் போராட்டம் நடந்து வருகிறது.
கண்மூடித்தனமான ஆயுத தாக்குதல்களால் அங்கு பொது மக்கள் நீண்டகாலமாகவே சிக்கியுள்ளனர்.
குறிப்பாக பெண்கள் பெரும் துன்பத்தை எதிர் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சூடானில் சமீபத்தில் வெடித்துள்ள உள்நாட்டுப் போரால் இளம் பெண்களும் , கர்ப்பிணி பெண்களும் தீவிர பாதிப்பை சந்தித்துள்ளதாக ஐ .நா தெரிவித்துள்ளது.
சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான கர்ப்பிணி பெண்கள் சூடானின் பதற்றமிக்க இடங்களில் சிக்கியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மருத்துவமனைகள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் பெண்கள் தொடர்ந்து சிகிச்சை எடுக்க முடியாத சூழலும் நீடிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.